சுய சரிதை LIFE STORY 53-12-06A என்னால் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.’ நான், ‘என்னால் முடியவில்லை...’ என்றேன். அவள்... ‘ஓ, அவள் மரித்துப் போய் விட்டாளே’ என்றேன். ‘என்னால் என் குழந்தையைக் குணப்படுத்த முடிய வில்லையே...?... தேவன் என்னுடைய குழந்தையை எதற்காக எடுத்துக் கொண்டார், அவர் ஏன் அதைச் செய்தார்?’ என்றேன். சரி. ஒன்றரை வருடங்களில், (அதற்கு முன்னர் கூட இருக்கலாம்) நான் என்னுடைய தகப்பனாரையும், என்னுடைய சகோதரனையும், என்னுடைய மனைவியையும், வெறுமனே சிறு பிள்ளையாயிருந்த என் குழந்தையையும், சரியாக ஒன்று, இரண்டு, மூன்று என இழந்து விட்டேன். அது அப்படியே அவையெல்லாவற்றிற்கும் கடைசியில் நடந்தது. என்னுடைய தகப்பனார் என்னுடைய கரங்களில் இருந்தவாறு மரித்துப் போனார். என்னுடைய சகோதரன் ஒரு - ஒரு தொலைபேசி கம்பத்தில் கொல்லப்பட்டான், சரியாக... முன்னால். அந்த இரவில் நான் வீட்டிற்கு வந்து என்னுடைய தாயாரிடம் கூறினேன். அவர்களும் கூட முழுவதுமாக மனமுடைந்து போயிருந்தார்கள். அப்பா சமீபத்தில் தான் மரித்துப்போயிருந்தார். எனவே நான் வீட்டிற்குச் சென்று, உள்ளே நுழைந்தேன். நான் கடந்து செல்ல முயற்சித்தேன்... நான் சற்று... விரும்பினேன். என்னுடைய தாயார் தம்முடைய வீட்டில் நான் தங்க விரும்பி னார்கள், என்னுடைய மாமியாரோ நான் அங்கே போக விரும்பினார்கள். உங்களுக்கு சொந்தமான ஒரு வீடு எப்பொழுதாவது உங்களுக்கு இருக்குமானால், அங்கே இல்லாதிருந்தது... அப்படியானால் இன்னும் கூடுதலாக திருப்தியளிக்கக்கூடிய ஒரு இடம் எங்குமே இல்லாதிருந்தது. நான் அங்கு சென்று, கூடை வடிவிலான குழந்தையின் தொட்டிலை (bassinet) ஆட்ட முயற்சித்தேன். அது குளிராக இருந்தது, வெளியே சமையலறையில் ஒரு சிறிய அடுப்பு எனக்கு இருந்தது, அங்கே வெளியே ஒரு - ஒரு - ஒரு அறை இருந்தது. உறைபனியும் பனியும் தரை முழுக்க விழுந்து கொண்டிருந்தது. நான் அங்கே உள்ளே இரவில் சென்று சமையல் பண்ண முயற்சித்தேன். அங்கே ஒரு சிறிய பழைய கட்டில் கிடந்தது. நான் உள்ளே சென்றேன். 2. அந்த இரவில் நடந்ததை நான் ஒருபோதும் மறக்கவே மாட்டேன். நான் அந்த மூலையைச் சுற்றிச் சென்றேன். நான் செய்தித்தாளையும், பெட்டியில் போடப்பட்டிருந்த தபாலையும் எடுத்துக் கொண்டு உள்ளே சென்றேன், வீட்டினுள் சென்றேன். அங்கே... இல்லாதிருந்தது. எங்களிடம் எந்த மரச்சாமான்களும் இல்லாதிருந்தது. ஆனால் நான் அதை தவிர்த்து விட வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். ஆனால் நண்பர்களே, அது மிக அதிகமாக அல்ல. ஆனால் அது என்னவாக இருப்பினும், அது அவளுக்கும் எனக்கும் சொந்தமானதாக இருந்தது. நாங்கள் அதை ஒன்றாகக் கொண்டிருந்தோம். நான் எவ்வளவு ஏழையாக இருந்தாலும், அது ஒரு பொருட்டல்ல, அது எங்களுடையதாக இருந்தது. நான் அதை அங்கிருந்து நீக்க விரும்பவில்லை. நாங்கள் ஒன்றாக ஜீவனம் பண்ணியிருந்தோம்; அவள் அதைக் குறித்துப் பொறுப்பெடுத்துக் கொண்டாள். அவளுடைய துணிமணிகள் கதவின் பின்னால் தொங்கிக் கொண்டிருந்ததை கண்டேன். என்னால் அதை மறக்கவே முடியவில்லை. நான் என்னுடைய தபாலை எடுத்துக் கொண்டு நடந்து சென்றேன். நான் ஒரு பழைய குளிர்ச்சியான அறையில் தங்கியிருந்தேன். நான் வேலை செய்து கொண்டுமிருந்தேன். நான் முதலாவதை பிரித்துப் பார்த்தேன், அதில், ‘செல்வி. ஷேரன் ரோஸ் பிரன்ஹாம்’ என்றிருந்தது, கிறிஸ்துமஸிற்காக சேமிக்கப்பட்டிருந்த கொஞ்சம் 80 சென்ட் காசுகள் அதில் இருந்தன, அது எனக்குத் திருப்பி அனுப்பப்பட்டிருந்தது. ஓ, என்னே, அங்கே மீண்டுமாக எல்லாம் முடிந்து போயிருந்தது. என்னால் இன்னும் அதிக தூரம் போக முடியுமா என்று நான் நினைத்துப் பார்க்கும் போது, என்னால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை... நான் முழங்கால்படியிட்டு கதறி அழுது ஜெபிக்கத் துவங்கினேன். நான் அடுத்த அறைக்குள் சென்று, அந்தப் பெட்டியில் முழங்காலில் நின்றபடி, என்னுடைய துப்பாக்கியை வெளியே எடுத்தேன், அது 38 மாடல் துப்பாக்கி, அதில் ஆறு குண்டுகளை இட்டேன். நான் வேட்டையாடி வந்திருக்கிறேன். பின்பு நான் அறைக்குள் திரும்பி வந்தேன். நான், ‘தேவனே, நான் - நான் பைத்தியக்காரனாய் ஆகப் போகிறேன். நான் ஒரு நிந்தையைக் கொண்டு வர விரும்பவில்லை. நான் பைத்தியக்காரனாய் ஆகப் போகிறேன். இன்னும் சரியாகச் சொன்னால், நான் பைத்தியக்காரனாய் ஆவதைக் காட்டிலும் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். எனவே நான் இப்பொழுதே உம்மை சந்திக்கப் போகிறேன்’ என்றேன். நான் சந்திக்கிறேன்... ‘பிதாவே, இந்த பாவத்துக்காக என்னை மன்னியும். இதற்கு மேலும் என்னால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை; நீர் என்னுடைய இருதயத்தை தேற்றவில்லையே. என்னால் இனிமேலும் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.’ நான் துப்பாக்கியின் அந்த ஹேமர் (hammer) பகுதியை பின்னால் இழுத்தேன்; நான் என்னுடைய தலையின் மேல் பகுதியில் அதை வைத்தேன். நான் அங்கேயிருந்த அந்தப் பழைய அழுக்கான கட்டிலின் அருகில் முழங்காலில் நின்று, ‘பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக’ என்று கூறி விட்டு, துப்பாக்கியின் விசையை அழுத்தத் துவங்கினேன்... ‘உம்முடைய இராஜ்யம் வருவதாக, செய்யப்படுவதாக’ என்று கூறி விட்டு, என்னுடைய முழு பலத்தோடும் விசையை அழுத்தத் துவங்கினேன், ஆனால் ஹேமர் பகுதியோ செயல்படவில்லை (துப்பாக்கி வெடிக்கவில்லை). நான், ‘ஓ, என்னுடைய ஜீவனை எடுக்கக் கூட முடியவில்லையே’ என்று கூறி விட்டு, துப்பாக்கியை எறிந்து விட்டேன், அது அங்கிருந்து வெளியே போய் விழுந்தது, ஆனால் அது அவ்விதமாக வீட்டின் வழியாக வெளியே போய் விழுந்தது. நான், ‘ஓ தேவனே, நான் என்ன செய்வது. நான் - நான் மரித்துக் கொண்டிருப்பது போன்று தோன்றுகிறதே’ என்று நினைத்தேன். நான் படுக்கையில் விழுந்து, தூக்கத்தில் ஆழ்ந்தேன். அப்படியே ஒரு சில நிமிடங்களில் உறங்கி விட்டேன். 3. நான் உறங்கிக் கொண்டிருந்தேன். நான் மீண்டும் கிழக்கில் இருந்ததாக சொப்பனம் கண்டேன். நான்... இருந்ததாக நினைத்தேன்.... ஒரு... பரந்த புல்வெளியில் நடந்து கொண்டு ஒரு பாடலை விசில் அடித்துக் கொண்டிருந்தேன். ‘பார வண்டியின் சக்கரம் உடைந்து போனதே...’ என்ற பாடல். நீங்கள் அந்தப் பாடலைக் கேட்டிருக்கிறீர்கள். நான் நோக்கிப் பார்த்த போது, பரந்த புல்வெளியில் பயணம் செய்கிற மூடப்பட்ட ஒரு பழைய பார வண்டி அங்கே இருந்தது, அதன் சக்கரம் உடைந்து காணப்பட்டது. நான், ‘நல்லது, உங்களுக்கு என்ன தெரியும்’ என்று எண்ணினேன். நான் - நான் உற்றுப் பார்த்த போது, அது அங்கே நின்று கொண்டிருந்தது, அங்கே இளம் பொன்னிற தலைமயிருடைய ஒரு அழகான பெண் நின்று கொண்டிருந்தாள், அவளுடைய நீண்ட இளம் பொன்னிற தலைமயிர் கீழே தொங்கிக் கொண்டிருந்தது, அவள் பனிவெண்ணிற வஸ்திரம் தரித்திருந்தாள். நான் ஒரு மகத்தான பெரிய தொப்பியை அணிந்திருந்தேன். நான் அந்தத் தொப்பியை கழற்றி விட்டு, ‘சிறு பெண்ணே, நீ எப்படியிருக்கிறாய்’ என்று கூறி விட்டு தொடர்ந்து நடக்கத் துவங்கினேன். அவள், ‘ஹலோ, அப்பா’ என்றாள். நான் சுற்று முற்றும் பார்த்து, ‘அப்பாவா?’ என்றேன். அவள், ‘ஆமாம்’ என்றாள். நான், ‘ஏன்’ என்றேன், தொடர்ந்து நான், ‘பெண்ணே, நீ என்னைப் போல அவ்வளவு வயதுள்ளவளாய் இருக்கிறாய். நீ எப்படி - நான் எப்படி உன்னுடைய அப்பாவாக இருக்க முடியும்?’ என்று கேட்டேன். ‘நல்லது, அப்பா, உங்களுக்கு ஞாபகம் இல்லையா? நீங்கள் சாவாமையைக் குறித்து போதித்திருக்கிறீர்களே’ என்றாள். அவர்கள் பரலோகத்தில் சின்னஞ்சிறிய குழந்தைகளாய் இருப்பார்களென்று நான் போதிப்பதில்லை. நான் ஒரு சாவாமையைக் குறித்துப் போதிக்கிறேன். நீங்கள் அங்கு போகும் போது, ஒரு சிறு குழந்தையாக இருப்பீர்களானால், நீங்கள் வயது சென்றவர்களாக ஆக மாட்டீர்கள், அது என்றென்றுமாக சிறு குழந்தைகளாகவே இருப்பீர்கள்... சாவாமையானது அங்கே அழிந்து போகாது. அவள், ‘சாவாமையைக் குறித்து நீங்கள் போதித்த உங்களுடைய போதனை உங்களுக்கு நினைவில்லையா? நான் கீழே பூமியில் இருந்த போது, உங்களுடைய சிறு ஷேரன் ரோஸாக இருந்தேன்’ என்றாள். நான், ‘தேனே, நீ ஷேரன் இல்லையா?’ என்றேன். அவள், ‘ஆமாம்’ என்று கூறி விட்டு, ‘பில்லி பால் எங்கே?’ என்று கேட்டாள். அதுதான் அவளுடைய சிறிய சகோதரன். நான், ‘ஓ, அவள்... இருப்பது எப்படி. தேனே, நான் இதைப் புரிந்து கொள்ளவில்லையே’ என்றேன். அவள், ‘அப்பா, நீங்கள் எங்கேயிருக்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியவில்லை’ என்றாள். நான், ‘நல்லது, இது... நான் இந்தப் புல்வெளியில் இருக்கவில்லையா?’ என்றேன். அவள், ‘இல்லை. உங்களுடைய வலது பக்கமாக திரும்பிப் பாருங்கள்’ என்றாள். நான் திரும்பிப் பார்த்தேன், அங்கே நான் ஒரு போதும் கண்டிராதது போன்ற மிக அழகான இடத்திலிருந்து ஒரு மகத்தான கண்ணுக்கினிய வெளிச்சம் வந்து கொண்டிருந்தது. அவள், ‘அப்பா, இது பரலோகம்’ என்றாள். தொடர்ந்து அவள், ‘அம்மா அங்கே மேலேயுள்ள வீட்டில் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்றாள். நான், ‘வீடா? எனக்கு - எனக்கு வீடு இருக்கிறது என்றா கூறுகிறாய்? தேனே, அங்கே ஒருபோதும் ஒரு பிரான்ஹாமுமே பணக்காரனாய் இருந்ததே கிடையாது, அவர்களுக்கு ஒருபோதும் சொந்தமாக ஒரு வீடும் இருந்ததே கிடையாது. எனக்கு ஒரு வீடு இருக்கிறது என்று நீ கூறுகிறாயா?’ என்றேன். அவள், ‘ஆனால் அப்பா, இப்பொழுது உமக்கு ஒரு வீடு இருக்கிறது’ என்றாள். அதன் காரணமாகத்தான் நான்... இரண்டு அறை கொண்ட குடிசை வீட்டை என்னால் ஞாகப்படுத்த நேர்ந்தால், அது கூட. சரியாகச் சொன்னால், இங்கே மியாமியில் உங்களுக்கிருக்கிற சிறந்த வீடுகளில் தேவனோடு தங்கியிருக்க வேண்டியிருந்ததைக் காட்டிலும் அந்த இரண்டு சிறிய அறை கொண்ட குடிசை வீட்டில் தான் தங்கியிருந்தேன். நான், ‘ஓ, தேனே, அது என்னுடைய வீடல்ல’ என்றேன். அவளோ, ‘ஆம், அது உங்களுடைய வீடு தான். அம்மா உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்றாள். நான், ‘என்னுடைய வீடு’ என்ற பாடலைப் பாடிய படியே, மேலே அதை நோக்கி நடக்கத் துவங்கினேன். மேலும் நான் நினைத்தேன்... அந்த வெளிச்சமானது மகத்தானதும் அழகானதுமான ஒரு அரண்மனையைச் (மாளிகையைச்) சுற்றிலுமிருந்து வந்து கொண்டிருந்தது. நான் படிகளின் மேலேறி நடந்து சென்று நோக்கிப் பார்த்தேன், அங்கிருந்து அதன் வழியாக கீழே நடந்து வந்தேன், இதோ அவள் வருகிறாள், அவள் பனி போன்ற வெண்மை நிற வஸ்திரம் உடுத்திருந்தாள், அவளுடைய கருமை நிற தலைமுடி அவளுடைய தோள்களைச் சுற்றிலும் கிடந்தது, அவளுடைய கறுப்பு கண்களில் வாலிபத்தின் ஒளி வீசுவது போல் காணப்பட்டது. அவள் 22 வயதில் மரித்தாள். அவள் என்னை சந்திக்கும்படி கீழே நடந்து வந்தாள். அவள் தன்னுடைய கரங்களால் பற்றிப்பிடித்துக் கொண்டாள். நான் அவளை நோக்கி வேக வேகமாய் ஓடிச்சென்று, என்னுடைய தலையை தாழ்த்தினேன் (bowed down). நான், ‘ஓ, தேனே. நான் புரிந்து கொள்ளவில்லையே’ என்றேன். அவள், ‘நீர் ஷாரோனைச் சந்தித்தீரா?’ என்று கேட்டாள். நான், ‘உ-ஊ. அவள் அழகான பெண்ணாக இருக்கிறாள் அல்லவா? அவள் - நம்முடைய சிறு தேன் ஒரு அழகான பெண்ணாக ஆகி விட்டாள் அல்லவா?’ என்றேன். ‘அவள் நிச்சயமாகவே அழகான பெண்ணாக இருக்கிறாள்’ என்றாள். தொடர்ந்து அவள், ‘பில்லி எங்கே?’ என்று கேட்டாள். நான், ‘தேனே, சற்று ஒரு நிமிடம் காத்திரு. இது...’ என்றேன். நான் இங்கே இயற்கையாக நின்று கொண்டிருப்பது போல, இங்கே ஏதோவொன்று தவறாய் உள்ளது. நான், ‘அங்கே ஏதோவொன்று தவறாயுள்ளது’ என்றேன். நான் சொன்னேன்... அவள், ‘பில்லி. நீர் மிகவும் களைப்படைந்துள்ளீர், இல்லையா?’ என்றாள். நான், ‘ஆம்’ என்றேன். நீர் ‘வியாதியஸ்தருக்காக ஜெபித்து வந்திருக்கிறீர்’ என்றாள். 4. நான் அந்த நாட்களில் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கவில்லை. எனவே நான் அறிந்திருந்த காரணம் அதுதான். நண்பர்களே, சில சமயங்களில் நான் இங்கே பிரசங்க பீடத்திலேயே மயக்கமடைந்து விடுகிறேன். அன்றொரு நாள் இரவில், நான் இங்கே உங்களோடு இருந்த போது, நான் உங்கள் மத்தியில் முழுவதுமாக மயக்கமடைந்து விட்டேன். நான் ஒருதடவை 24 மணி நேரங்கள் வரைக்கும் மயக்க நிலையிலையே இருந்தேன். இந்த இரவுகளில் ஒன்றில் நான் போகப் போகிறேன் என்பது எனக்குத் தெரியும். அது உண்மை. எனக்கு வழக்கமாக 158 பவுண்டுகள் எடை இருக்கும். எனக்கு இப்பொழுதோ நூற்றியிருபது சொச்சம் எடை தான் இருக்கிறது. வழக்கமாக நான் 38 அளவுடைய கோட்டை அணிவேன், இங்கேயிருப்பது 24 அளவுடைய கோட்டு தான். நான் போய்க் கொண்டிருக்கிறேன். அது உண்மை. ஆனால் நான் உண்மையுள்ளவனாக இருக்க விரும்புகிறேன், நான் செய்த காரியங்களை மீண்டும் செய்ய மாட்டேன். அவள், ‘நீர் களைப்படைந்தவராய் இருக்கிறீர், மேலும் வியாதியஸ்தருக்காக ஜெபித்து வருகிறீர்’ என்றாள். நான், ‘அது உண்மை தான்’ என்றேன். அவள், ‘இப்பொழுது, அழ வேண்டாம்’ என்றாள். அவள் வழக்கமாக என்னை ஆறுதல் படுத்துவாள், காரியங்கள் சரியாகவே தொடர்ந்து நடக்கும் என்று நான் நினைத்திருந்தேன். வீட்டிற்கு வந்து அதைக் குறித்து அழுவேன். அவள் தன் கரங்களை என்னைச் சுற்றிலும் போட்டு, தட்டிக் கொடுக்கத் துவங்குவாள். அவள், ‘பில்லி, அழாதிரும்’ என்றாள். அவள், ‘எழுந்து நில்லுங்கள்’ என்றாள். நான் எழுந்து நின்றேன். அவள், ‘நீர் உட்காரக் கூடாதா?’ என்றாள். நான் அங்கே நோக்கிப் பார்த்தேன், அங்கே மகத்தானதும் பெரிய அழகானதுமான நாற்காலி இருந்தது. நான் அந்த நாற்காலியை நோக்கிப் பார்த்தேன். நான் அவளையும் திரும்பிப் பார்த்தேன். அவள், ‘நீர் எதைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறீர் என்பது எனக்குத் தெரியும்’ என்றாள். 5. ஒரு சமயம் கீழே பூமியில் நாங்கள்... நான் சென்று ஒரு நாற்காலியை வாங்கினேன். நான் வேலை செய்து மிகவும் களைப்படைந்தவனாய் இருப்பேன், அதன்பிறகு பாதி இராத்திரி வரையிலும் பிரசங்கித்துக் கொண்டும், பீட அழைப்புகளையும் மற்றும் காரியங்களையும் செய்வேன். நான் ஒரு நாற்காலியை வாங்கினேன்; அதன் விலை 15 டாலர்கள் 95 சென்ட்கள். நான் அதற்காக இரண்டு டாலர்கள் செலுத்தினேன், என்னால் அதற்காக மாதத்திற்கு ஒரு டாலர் 25 சென்ட்கள் (a dollar and a quarter) தான் செலுத்த முடிந்தது, அதுதான் என்று நான் நம்புகிறேன். மேலும் நான்... நண்பர்களே, உங்களுக்குத் தெரியும், நீங்கள் போதுமான அளவு பணமில்லாத இடங்களில், எவ்வாறு அதைப் பெற்றுக் கொள்கிறீர்கள் என்று உங்கள் எல்லாருக்குமே தெரியும், உங்களுக்குத் தெரியும். இரண்டு அல்லது மூன்று மாதங்கள் பணம் செலுத்தத் தவறினேன். என்னுடைய 1 டாலர் 25 சென்டுகள் பணத்தை செலுத்த முடியவில்லை. மேலும் அது - வீட்டில் எங்களிடம் இருந்ததிலேயே அது மாத்திரமே நல்ல மாதிரியான மரச்சாமானாய் இருந்தது. நான் வழக்கமாக அங்கு சென்று அந்த நாற்காலியில் அமர்ந்து, இரவில் இளைப்பாற விரும்புவேன், ஒருக்கால் பன்னிரண்டு, ஒரு மணியாக இருக்கும், சிறிது நேரம் ஓய்வெடுத்து, ஒருக்கால் என்னுடைய வேதாகமத்தை வாசித்துக் கொண்டிருப்பேன். நான் மகிழ்ச்சியடைந்தேன், என்னால்... செய்ய முடியவில்லை. அவர்கள் இந்த நாற்காலியை எடுத்துச் செல்ல வருவதாக, எனக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பினார்கள். அந்த நோட்டீஸ் என்னிடம் கொடுக்க அவள் எவ்வளவு பயந்தாள் என்பது நினைவிருக்கிறது. அவள் ஒரு உண்மையான பெண்ணாக இருந்தாள். அவள் மரித்துப் போய் விட்டாள். ஆனால் நான் அப்படியே அதேவிதமாகவே அவளை நேசிக்கிறேன். அது உண்மை. அவள் - அவள், ‘தேனே, நான் ஒரு காரியத்தை உம்மிடம் கூற வேண்டியிருப்பதற்காக அதைக் கூற வெறுக்கிறேன்’ என்றாள். எங்களால் விற்கவோ பணத்தை செலுத்தவோ எங்களிடம் வேறு எதுவுமே இல்லாதிருந்தது. நான், ‘இனிய இருதயமே, ஓ, அந்த நாற்காலியைக் குறித்து எனக்குக் கவலையில்லை. அப்படியே அது போகட்டும்’ என்றேன். 6. கடைசியாக அவளால் கூடுமான காலம் வரை அதைக் கொண்டு போக விடாமல் வைத்திருந்தாள். இறுதியாக, அவர்கள் வந்து அதை எடுத்துக் கொண்டு போகலாம் என்று அவள் அவர்களிடம் கூற வேண்டியிருந்தது. அவள் - அவர்கள் வந்து அதை எடுத்துக் கொண்டு போன நாள் எனக்கு ஞாபகம் இருக்கிறது, அந்த இரவில் அவள் எனக்கு செர்ரி பை (cherry pie) சமைத்துக் கொடுத்தாள். அது... எனக்கு எப்போதும் செர்ரி பை என்றால் நன்றாகப் பிடிக்கும், அவள் எனக்கு... செய்து கொடுக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். உங்களுக்குத் தெரியும். மீன்பிடிப்பதற்காக சில புழுக்களைத் தோண்டியெடுக்கிற பையன்களை அவள் கொண்டிருந்தாள், மேலும் அவள் விரும்பினாள்... அங்கே ஏதோவொன்று தவறாய் இருப்பதை நான் அறிந்தேன். எனவே இரவு உணவு முடிந்த பிறகு, நாங்கள் அறைக்குள் சென்றோம். நான், ‘நாம் உள்ளே போகலாம்...’ என்று கூறினேன். அவளோ, ‘வேண்டாம், நாம் மீன்பிடிக்கப் போகலாம்’ என்றாள். அந்த நாற்காலி போய் விட்டதை நான் காண அவள் விரும்பவேயில்லை. எனவே அதன்பிறகு... நான், ‘நாம் அறைக்குள் போகலாம்’ என்றேன். எனவே நான் அப்படியே என் கரத்தை அவளைச் சுற்றிலும் போட்டுக் கொண்டு, அறைக்குள் நடந்து சென்றேன். நான் உள்ளே நடந்து சென்றபோது, அந்த நாற்காலி போயிருந்தது. அவள் தன்னுடைய தலையை சாய்த்துக் கொண்டு, அழத் துவங்கினாள். நான், ‘அதெல்லாம் சரிதான்’ என்றேன். 7. அப்போது அவள் என்னிடம் கூறினாள், அங்கே, ‘அவர்கள் வந்து எடுத்துக் கொண்டு போக வேண்டியதாயிருந்த அந்த நாற்காலி உமக்கு ஞாபகம் உள்ளதா?’ என்று கேட்டாள். நான், ‘ஆம்’ என்றேன். அவள், ‘ஆனால் தேனே, இந்த நாற்காலியை எடுத்துச் செல்ல அவர்கள் ஒருபோதும் வரமாட்டார்கள். இதற்காக கிரயம் செலுத்தப்பட்டாயிற்று’ என்று கூறினாள். ஓ, நண்பர்களே,. கவனியுங்கள்... நான் ஒரு குழந்தையாக இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள் என்று யூகிக்கிறேன். ஆனால் கவனியுங்கள். யாரோ ஒருவர் என்னிடம், ‘சகோதரன் பிரன்ஹாமே, நீர் எப்போது ஓய்வு எதையாவது எடுக்கிறீர்?’ என்று கேட்டார். எனக்கு இளைப்பாற ஒரு இடமுண்டு. இந்நாட்களில் ஒன்றில் இதைத்தாண்டி அக்கரைக்குப் போகப் போகிறேன். நான் உட்கார அங்கே ஒரு நாற்காலி உண்டு ...?... உங்கள் நேரம் கடந்து விட்டது. ஓ, என்னை மன்னியுங்கள். 8. ஓ தேவனே, இரக்கமாயிரும். என்னுடைய சிந்தையானது கடந்து சென்ற நாட்களுக்குப் போகிற வேளையில். இன்று அவளுடைய கல்லறையானது பனியினால் மூடப்பட்டிருக்கிறது என்றும், என்னுடைய விலையேறப்பெற்ற அன்பு குழந்தை அங்கே படுத்துக் கொண்டிருக்கிறாள் என்பதையும் நினைத்துப் பார்க்கும் போது... ஈஸ்டர் காலையில் அவளுடைய சிறிய மகன் பில்லியும் நானும் அந்தக் கல்லறையின் அருகில் முழங்காலில் நின்றதை நான் எண்ணிப் பார்க்கிறேன், அங்கே அவனுடைய அப்பா மலர்களை வைத்தேன். நான் அவளுக்கு வாக்குக் கொடுத்தேன்... தேவனே, நீர் என்னை மன்னீப்பீராகில், உமக்காக என்னால் செய்ய முடிந்த எல்லாவற்றையும் நான் செய்வேன் என்று உமக்கு வாக்களிக்கிறேன். தேவனே, எனக்கு உதவி செய்யும், நீர் உதவி செய்ய மாட்டீரா? அது... அந்த அளவுக்கு மிகவும் கடினமாக உள்ளது. பிதாவே, ஜனங்கள் அதைக் கண்டு நம்புவார்கள். ஓ இப்பொழுது எனக்கு ஒத்தாசை செய்ய மாட்டீரா? இந்த ஜனங்களுக்கு முன்பாக நான் ஒரு - ஒரு குழந்தையாக இருக்க விரும்பவில்லை என்பதை நீர் அறிவீர், ஆனால் ஓ தேவனே, நீர் என்னை வீட்டிற்கு வரும்படி அழைக்கும் அந்த நாள் மட்டுமாக நான் உண்மையுள்ளவனாக இருக்கும்படி செய்ய வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். அவளுடைய விலையேறப்பெற்ற ஆத்துமாவும், என்னுடைய குழந்தையின் ஆத்துமாவும் இளைப்பாறட்டும். தேவனே, நான் எப்படி இருக்க வேண்டுமென்று நீர் விரும்புகிறீரோ அப்படிப்பட்ட உமக்குகந்த தகப்பனாகவும், கணவனாகவும், பிள்ளையாகவும் நான் இருக்கட்டும். அன்பு தேவனே, இந்த பிற்பகலில், நாங்கள் இங்கே இருக்கிற நேரத்தில், உம்மை அறிந்து கொள்ளாத யாராவது இங்கே இருப்பார்களானால். நீர் அவர்களையும் கூட மன்னிக்க வேண்டும் என்று ஜெபிக்கிறேன், பிதாவே. நாங்கள் இதை அவருடைய நாமத்தில் கேட்கிறோம். 9. என்னை மன்னித்துக் கொள்ளுங்கள், நண்பர்களே. என்னால் அப்படியே இதனோடு தொடர்ந்து போக முடியவில்லை, ஆனால்... நான் இன்று களைப்படைந்தவனாகவும், சோர்வடைந்தவனாகவும் இருக்கிறேன். இன்றிரவு ஆராதனைக்குப் பிறகு, விமானத்தைப் பிடிக்க, அங்கு போய் சேர வேண்டியுள்ளது, ஒருக்கால் இதுவே இங்கு நான் வருகிற கடைசி தடவையாக இருக்கலாம். ஆனால் ஒரு மகிழ்ச்சிகரமான நாளைய தினம் எனக்காக காத்திருக்கிறது, அங்கு முத்துக்கள் பதிக்கப்பட்ட வாசல்கள் ஆடிக் கொண்டே விரிவாய் திறக்கும், இந்த துன்பத்தின் பள்ளத்தாக்கை நான் கடக்கும்போது, நான் அக்கரையில் தங்கி வாழ வாஞ்சிக்கிறேன். நீங்களும் கூட அங்கு போக விரும்பவில்லையா? இன்று இங்கிருக்கிற எத்தனை பேர் அக்கரையில் என்னை சந்திக்க விரும்புகிறீர்கள்? அது நீங்கள் கொடுக்கும் வாக்கு தானே? அது ஒரு சந்திப்புத் திட்டம் தானே? என்னுடைய இருதயத்தின் ஆழத்திலிருந்து நான் வியப்படைகிறேன், நான் இதைச் செய்வதென்பது மிகவும் அபூர்வமானது, ஆனால் நான் இதைச் செய்ய வேண்டுமென்று உணருகிறேன். இப்பொழுது இங்கே இரட்சிக்கப்படாத ஒரு நபர் இருந்து, கூறுவாரா என்று - எழுந்து நின்று, ‘சகோதரன் பிரன்ஹாமே, இப்பொழுது எனக்காக ஜெபியுங்கள். தேவன் கேட்பாரானால்...’ என்று கூறுவாரா என்று வியப்படைகிறேன். சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. வேறு யாராவது? சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. உம்மையும், உம்மையும், உம்மையும், எழுந்து நில்லுங்கள். அது சரி. பரிசுத்த ஆவியைப் பெற்றிராத நீங்கள் அனைவரும் உங்கள் காலூன்றி எழுந்து நின்று, ‘சகோதரன் பிரன்ஹாமே, எனக்காக ஜெபியுங்கள்’ என்று கூறுங்கள். அது சரியே. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சபையோரைக் கவனியுங்கள்...?... அப்படியே ஒரு நிமிடம் தொடர்ந்து நின்று கொண்டிருங்கள். அப்படியே நீங்கள் ஒவ்வொருவரும் தொடர்ந்து நின்று கொண்டிருங்கள். இரட்சிக்கப்படாதவர்கள்... ஓ இரக்கம். அங்கே நதிக்கு அப்பால் ஒரு தேசமுண்டு.... அப்படியே தொடர்ந்து நின்று கொண்டிருங்கள். நாம் மீண்டும் சந்திக்கும் ஒரு இடமுண்டு. இப்பொழுது கொஞ்சம் ஐம்பது, எழுபத்தைந்து பேர். குருடரின் கண்களைத் திறக்கவும், செவிடும் ஊமையுமாயிருப்பவர்களைக் குணமாக்கவும் தேவன் என்னுடைய ஜெபங்களைக் கேட்பாரானால், நான் உங்களுக்காக ஜெபித்தால், அவர் என்னுடைய ஜெபத்தைக் கேட்பார் என்று நீங்கள் எண்ணவில்லையா என்று நான் இங்கே வியப்படைகிறேன். அவர் ஜெபத்தைக் கேட்பார் என்று நீங்கள் நினைக்கவில்லையா? சரி. 10. இங்கே இந்த ஜெபத்தில் இன்னும் கூடுதலாக எத்தனை பேர் சேர்ந்து கொள்ள விரும்புகிறீர்கள், சற்று எழுந்து நில்லுங்கள்? இங்கேயுள்ள எத்தனை பேர் (அது சரியே) இரட்சிக்கப்படாதவர்கள், எழுந்து நில்லுங்கள்? பியானோ இசைக்கப்பட்டுக் கொண்டிருக்கையில், நீங்கள் இங்கே சற்று எழுந்து நின்று, நான் பீடத்தண்டை உங்கள் கரத்தை குலுக்குவேனா என்று வியப்படை கிறேன். இங்கே எழுந்து நிற்கும் உங்கள் கரத்தை நான் குலுக்கட்டும், நாம் ஒன்றாக ஜெபிப்போம். தேவன் உங்களை இரட்சிக்க விரும்புகிறார். இங்கே வாருங்கள், இந்த - இந்த இசை இசைத்துக் கொண்டிருக்கையில், நான் உங்கள் கரத்தைக் குலுக்கட்டும். சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் இங்கே பீடத்தண்டையில் தொடர்ந்து இருங்கள். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, சகோதரியே. சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. உன்னையும் கூட, உன்னையும் தேவன் ஆசீர்வதிப்பாராக. இனிய இருதய முடைய பிள்ளைகளே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக; தேவன் உங்களுடைய சிறிய இருதயங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது சரி. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. சகோதரனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவன் உன்னையும், உன்னையும் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. என்னுடைய அன்பு சகோதரனே சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. ஓ, விலைறேப்பெற்ற ஆசீர்வாதங்கள். ஓ, என்னே, நீங்கள் வந்து, பீடத்தைச் சுற்றிலும் ஒன்றாகக் கூடி வர மாட்டீர்களா, நீங்களும் கூட வர மாட்டீர்களா? இரட்சிக்கப்படாதவர்கள்..